தமிழ் டைம்ஸ் logo
சிவகங்கையில் கால்நடை வளர்ப்போருக்கு பொன்னான வாய்ப்பு: இலவச கோமாரி தடுப்பூசி முகாம் துவங்கியது !
17 ஜூலை, 2026
abplive
சுகாதாரம்

சிவகங்கையில் கால்நடை வளர்ப்போருக்கு பொன்னான வாய்ப்பு: இலவச கோமாரி தடுப்பூசி முகாம் துவங்கியது !

சிவகங்கை மாவட்டம் தேசியகால்நடைநோய்த்தடுப்புத்திட்டம் (NADCP) 9-வது சுற்று கால் மற்றும் வாய்க்காணை (கோமாரி தடுப்பூசி பணி), கால்நடைகளுக்கு நோய் வராமல் தடுக்கும்பொருட்டு இலவச  தடுப்பூசி முகாம், இன்று 01.07.2026 முதல் 10.08.2026 வரை நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.   தேிசிய கால்நடை நோய்த்தடுப்புத் திட்டம்   சிவகங்கை மாவட்டத்தில், தேிசிய கால்நடை நோய்த்தடுப்புத் திட்டதின் மூலம் (NADCP – FMD 9th ROUND) 2,19,050 இரண்டு லட்சத்து பத்தொன்பதாயிரத்து ஐம்பது மாட்டினங்களுக்கு கால் மற்றும் வாய்க்காணை நோய் வராமல் தடுக்கும்பொருட்டு இலவசமாக தடுப்பூசி முகாம் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பாக 01.07.2026 முதல் 10.08.2026 வரை நடைபெறவுள்ளது.    முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.   மேலும், மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் தடுப்பூசி போடப்படவுள்ளது. இதற்காக 69 கால்நடை மருத்துவ குழுக்கள் உருவாக்கப்பட்டு தினந்தோறும் ஒரு குழுவானது 150 கால்நடைகள் வீதம் தடுப்பூசி போட பணிக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு மாத கன்றுகள் முதல் அனைத்து வயதுடைய மாட்டினங்களுக்கும் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள கால்நடைவளர்ப்போர், இம்முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.   கால்நடைவளர்ப்போர் இந்த இலவச தடுப்பூசி முகாம்   எனவே, கால்நடைவளர்ப்போர் இந்த இலவச தடுப்பூசி முகாமை பயன்படுத்தி கால் மற்றும் வாய்க்காணை நோயிலிருந்து தங்களது கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ள அருகிலுள்ள கால்நடைமருத்துவ நிலையங்களை    அணுகி தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தெரிவித்துள்ளார்.

இந்த கட்டுரை abplive ஆல் வெளியிடப்பட்டது மற்றும் சுகாதாரம் செய்திகளை உள்ளடக்கியது.