தமிழ் டைம்ஸ் logo
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
17 ஜூலை, 2026
abplive
வணிகம்

Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?

தங்கத்தில் தொடரும் முதலீடு தங்கத்தின் விலையானது கடந்த 5 வருடங்களில் மட்டும் பல மடங்கு அதிகரித்துள்ளது. அந்த வகையில், கடந்த 2021ஆம் ஆண்டில் ஒரு சவரன் 30 ஆயிரம் முதல் 38 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில்., 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் 1 லட்சத்து 34 ஆயிரம் என்ற இமாலய உயரத்தை எட்டியது. அடுத்தடுத்த நாட்களில் பொருளாதார மாற்றம் காரணமாக தங்கம் விலையானது குறைந்தது. இதன் காரணமாக கடந்த ஒரு மாதமாக ஒரு சவரன் 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் முதல் 1லட்சத்து 18 ஆயிரம் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை நிலவரம் ஜூலை 11 ஆம் தேதி கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 13,300 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 குறைந்து 1,06,400 ரூபாய்க்கு விற்பனை. ஜூலை 12 ஆம் தேதி தங்கம் விலை மாற்றமில்லை. ஜூலை 13 ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 100 ரூபாய் குறைந்து 13,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 1,05,600 ரூபாய்க்கு விற்பனை. ஜூலை 14 ஆம் தேதி  கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் குறைந்து 13,150 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1,05,200 ரூபாய்க்கு விற்பனை.  இன்றைய தங்கம் விலை என்ன.? தங்கத்தின் விலையானது கடந்த 3 நாட்களாக குறைந்து வந்த நிலையில், இன்று திடீரென அதிகரித்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அந்த வகையில் இன்று கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 13ஆயிரத்து 180 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 1,05,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையானது கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 240 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு  5ஆயிரம் ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

இந்த கட்டுரை abplive ஆல் வெளியிடப்பட்டது மற்றும் வணிகம் செய்திகளை உள்ளடக்கியது.