தமிழ் டைம்ஸ் logo
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
17 ஜூலை, 2026
abplive
வணிகம்

NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!

நீட் தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்ட நிலையில் ஆண்களை விடப் பெண்கள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மருத்துவப் படிப்புகளுக்கான மறு நீட்தேர்வு முடிவுகளை தேசியத் தேர்வுகள் முகமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த முடிவுகளின்படி, நீட் தேர்வில் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களில் ஆண்களை விடப் பெண்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஜூன் 21ஆம் தேதி நடைபெற்ற தேர்வின் முடிவுகளில் முக்கிய ஹைலைட்ஸ் இதோ! பெண்களின் ஆதிக்கம் சுமார் 20 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வில் மொத்தம் 11.21 லட்சம் பேர் மருத்துவப் படிப்புகளுக்குத் தகுதி பெற்றுள்ளனர். இதில், தகுதி பெற்றவர்களில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட மிக அதிகமாக உள்ளது. மொத்தத்தில் 58 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெண் தேர்வர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் 551 நகரங்களிலும் வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் மொத்தம் 13 மொழிகளில் 5,440 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. மொத்த தேர்வர்கள்: இத்தேர்வெழுத மொத்தம் 24,06,079 பேர் பதிவு செய்திருந்த நிலையில், சுமார் 20 லட்சம் மாணவர்கள் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். டாப்பர்களின் எண்ணிக்கை: 720க்கு 715 என்ற அதிகபட்ச மதிப்பெண்ணை ஆர்யன் குப்தா (பஞ்சாப்) மற்றும் பன்ஷுல் பன்சால் (ஹரியானா) ஆகியோர் கூட்டாகப் பெற்றனர். இந்தத் திருத்தப்பட்டஇறுதிமதிப்பீட்டுமுறையினால், 720-க்கு 690 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 138 ஆக உள்ளது. இந்த 138 பேரும் நாடு முழுவதும் 66 நகரங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். 705 மதிப்பெண்களுக்கு மேல் 17 பேர் பெற்றுள்ளனர். இவர்கள், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், தமிழ்நாடுமற்றும்தெலங்கானாமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். 700 மதிப்பெண்களுக்கு மேல் 19 தேர்வர்கள் பெற்றுள்ளனர். 1,492 பேர் 650 மதிப்பெண்களுக்கு மேலும்10,160 பேர் 600 மதிப்பெண்களுக்கு அதிகமாகௌம் பெற்றுள்ளனர். முதல் முறையாக 93 சதவீத தேர்வர்கள், நீட் தேர்வை எழுதி இருந்தனர். இதில் 99 சதவீத தேர்வர்கள், 17 முதல் 19 வயது வரை இருப்பவர்கள் ஆவர். மாற்றியமைக்கப்பட்ட கட்-ஆஃப்: திருத்தப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், பொதுப்பிரிவு, ஓபிசி, பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் ஆகிய அனைத்து இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்குமான தகுதி மதிப்பெண்கள் மற்றும் அகில இந்தியத் தரவரிசைப் பட்டியலில் மாற்றங்கள் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. . மதிப்பெண் சான்றிதழ்: மாணவர்கள் தேசியத் தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டுப் புதிய மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சந்தேகங்கள், புகார்களுக்கு: neetug2026@nta.ac.in அல்லது 011-40759000 இந்தத் திருத்தப்பட்ட இறுதி முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுரை abplive ஆல் வெளியிடப்பட்டது மற்றும் வணிகம் செய்திகளை உள்ளடக்கியது.