தமிழ் டைம்ஸ் logo
TNPSC: க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
17 ஜூலை, 2026
abplive
வணிகம்

TNPSC: க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?

TNPSC Group-1 Preliminary Exam: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் க்ரூப்-1 தேர்வு மூலம் 26 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. க்ரூப்-1 தேர்வு தேதி மாற்றம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 23.08.2028 அன்று வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - 1 (தொகுதி பணிகள்) அறிவிக்கையில் முதல்நிலைத் தேர்வானது 06.09.2026-ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அத்தேர்வானது 27.09. 2026 அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. தேதி மாற்றத்திற்கான சரியான காரணம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. அதேநேரம், இந்த தேர்வுக்கு தயாராக தேர்வர்களுக்கு கூடுதலாக சுமார் 16 நாட்கள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்ற தேர்வர்களின் கோரிக்கை தொடர்பாக எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்..! தமிழ்நாட்டில் காலியாக அரசு உயர் பதவிகளுக்கான பல்வேறு காலி பணியிடங்களில், 26 இடங்களை நிரப்புவதற்கான  க்ரூப்-1 (Group 1 Main Exam) முதன்மைத் தேர்வு வரும் செப்டம்பர் 6ம் தேத் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்திருந்தது. தொடர்ந்து கடந்த ஜுன் 30ம் தேதி தொடங்கிய ஆன்லைன் விண்ணப்ப வழிமுறைகளானது வரும் ஜூலை 29-ந்தேதி வரை திறந்திருக்கும். தேர்வு எழுத விரும்பும் நபர்கள் உரிய முறைகளை பின்பற்ற விண்ணபிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான், தேர்வு நடத்தப்படும் தேதியில் அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நிரப்பப்பட உள்ள பணியிடங்கள்: ஒட்டுமொத்தமாக நிரப்பப்பட உள்ள 26 காலிப்பணியிடங்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. துணை ஆட்சியர்கள் - 12 பேர் உதவி ஆணையர் (வணிக வரிகள்) - 2 பேர் கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் - 3 பேர் மாவட்ட பதிவாளர் - 8 பேர் உதவி ஆணையர் (தொழிலாலர்) - 1 இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான வயது வரம்பானது பொதுவாக 34 வயதை நிரம்பியிருக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பல்வேறு பிரிவுகளுக்கு வழங்கப்படும் தளர்வுகளின் அடிப்படையில், அதிகபட்சமாக 50 வயதுக்குட்பட்ட ராணுவ வீரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதையும் படியுங்கள்: TN Weather Update: 4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை மூன்று நிலை தேர்வுகள்: க்ரூப் -1 காலிப்பணியிடங்கள் மூன்று நிலை தேர்வுகளின் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. முதல்நிலை தேர்வு முதன்மை தேர்வு நேர்முக தேர்வு ஊதிய விவரம்: TNPSC க்ரூப் 1 பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரிகளுக்கு, 7வது ஊதியக் குழுவின்படி அடிப்படை ஊதியம் ரூ. 56,100 முதல் ரூ. 1,77,500 அல்லது சில நிலைகளில் ரூ. 2,05,700 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படி (DA), வீட்டு வாடகைப்படி (HRA) போன்ற பல்வேறு படிகள் (Allowances) சேர்க்கப்பட்டு, தொடக்க நிலையில் கையில் கிடைக்கும் சம்பளம் தோராயமாக ரூ. 80,000 முதல் ரூ. 1,20,000 வரை இருக்கும் என கூறப்படுகிறது.  

இந்த கட்டுரை abplive ஆல் வெளியிடப்பட்டது மற்றும் வணிகம் செய்திகளை உள்ளடக்கியது.