தமிழ் டைம்ஸ் logo
TN Govt: குட்டீஸ்களுக்கு வார்னிங்..! முக்கிய உணவு பொருளுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசு - காரணம் என்ன?
17 ஜூலை, 2026
abplive
சுகாதாரம்

TN Govt: குட்டீஸ்களுக்கு வார்னிங்..! முக்கிய உணவு பொருளுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசு - காரணம் என்ன?

TN Govt: அதிக நிற முட்டிகளை பயன்படுத்தி விற்கப்படும் கலர் அப்பளம், குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அரசு தரப்பு விளக்கமளித்துள்ளது. கலர் அப்பலங்களுக்கு தடை அதிக நிற முட்டிகளை பயன்படுத்தி விற்கப்படும் கலர் அப்பளம் விற்பனை செய்ய தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கண்ணை கவரும் கலர் அப்பளத்தை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்க வேண்டாம் எனவும் உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. அடிக்கடி கலர் அப்பளம் சாப்பிட்டால் செரிமான பிரச்சனை, சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குழந்தைகளுக்கு எச்சரிக்கை: முக்கியமாக குழந்தைகளுக்கு இந்த கலர் அப்பளத்தை சாப்பிட்டால் அலர்ஜி மற்றும் கவன சிதறல் உண்டாகலாம் எனவும் உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ளது. பாரம்பரியமாக உளுந்து, அரிசி உள்ளிட்டவையில் தயாரிக்க கூடிய அப்பளத்தை வாங்கி சாப்பிட வேண்டும் என உணவு பாதுகாப்பு ஆலோசனை வழங்கியுள்ளது. சந்தைகள், சுற்றுலா தளங்கள் மற்றும் பொருட்காட்சிகள் உள்ளிட்ட இடங்களில் கலர் அப்பளம் விற்பனை செய்ய வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளதோடு,  நிற மூட்டிகளை பயன்படுத்தி விற்கப்படும் கலர் அப்பளம் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடும் எனவும் தமிழக உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையும் படியுங்கள்:CM Vijay: லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா? தொடரும் தடை உத்தரவுகள்: தமிழ்நாட்டில் மக்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு சில உணவுப்பொருட்களுக்கு தடை விதிக்கும் நடவடிக்கை என்பது கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், உணவு நச்சுத்தன்மை (Food poisoning) ஆபத்து காரணமாக, பச்சைக் முட்டைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் மயோனைஸ் உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது வண்ணங்கள் சேர்க்கப்பட்ட பஞ்சு மிட்டாய் உற்பத்திக்கு தடை அச்சு மையில் உள்ள ரசாயனங்கள் கலப்படம் ஆவதைத் தடுக்க, சூடான வடை, பஜ்ஜி, போண்டா போன்ற உணவுப் பண்டங்களைச் செய்தித்தாள்களில் (Newspapers) மடித்துக் கொடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை அல்லது நிக்கோடின் கலந்த மெல்லும் உணவுப் பொருட்களுக்கும் ஏற்கனவே தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது இவற்றின் தொடர்ச்சியாக தற்போது வண்ண அப்பளங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுரை abplive ஆல் வெளியிடப்பட்டது மற்றும் சுகாதாரம் செய்திகளை உள்ளடக்கியது.