தமிழ் டைம்ஸ் logo
குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை: நரம்பை உள்ளே வைத்து தைத்ததால் 15 ஆண்டுகள் ஆசிரியைக்கு நரக வேதனை!
17 ஜூலை, 2026
abplive
சுகாதாரம்

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை: நரம்பை உள்ளே வைத்து தைத்ததால் 15 ஆண்டுகள் ஆசிரியைக்கு நரக வேதனை!

மனுதாரரின் புகார் குறித்து தமிழக குடும்ப நலன் மற்றும் சுகாதார துறையினர் விசாரணை நடத்தி சட்ட படி  நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு. பள்ளி ஆசிரியை கவிதாவின் மனு   ராமநாதபுரத்தைச் சார்ந்த தனியார் பள்ளி ஆசிரியை கவிதா உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு. எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதால் கடந்த 2011 ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். இந்த அறுவை சிகிச்சையை அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மதுரம் அரவிந்தராஜ் மேற்கொண்டார். அறிவை சிகிச்சை செய்து வீடு திரும்பிய நாளிலிருந்து அடி வயிற்று வலி மற்றும் பிறப்புறுப்பில் நோய் தொற்று தொடர்ந்து ஏற்பட்டது இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானேன். இந்நிலையில் டிசம்பர் 2025 ஆம் ஆண்டு அதிக அளவில் கட்டிகள் வந்ததால் தனியார் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்ததில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த போது நரம்பு மற்றும் நூல்களை உள்ளே வைத்து தைத்தது தெரிய வந்தது இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு மீண்டும் அறுவை சிகிச்சை செய்து நூல் மற்றும் நரம்புகள் அகற்றப்பட்டது. தற்போது நோய் தொற்றுகள் நீங்குள்ளது. உச்ச நீதிமன்றம் இதுபோன்று அறுவை சிகிச்சையின்  மருத்துவர்கள் கவனக்குறைவாக செயல்படுவது, மருத்துவ கவன குறைபாடு கடுமை குற்றமாகும் என தெரிவித்துள்ளது. எனவே அதன் அடிப்படையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு உரிய  இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.     இந்த மனு இன்று நீதிபதி சரவணன் முன் விசாரணைக்கு வந்தது.   அப்பொழுது தமிழ்நாடு மருத்துவக் கழகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரரின் கோரிக்கை மனு கடந்த மாதம் கிடைக்கப் பெற்றது. அதன் அடிப்படையில்  கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவர்கள் மீது முதல் கட்ட விசாரணை  நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, என தெரிவித்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செல்வகுமார் மருத்துவர்களின் இந்த கவனக்குறைவால் மனுதாரர் ஆசிரியர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் தனது இயல்பான வாழ்க்கையை கடந்த 15 வருடங்களாக இழந்து உள்ளார். எனவே, உரிய இழப்பீடும் நடவடிக்கையும் வேண்டும் என வாதிட்டார். இதனை பதிவு செய்த நீதிபதி குடும்ப நல மருத்துவ துறை உரிய விசாரணை மேற்கொண்டு மருத்துவ கவன குறைபாடு ஏற்பட்டு இருந்தால் மருத்துவர்கள் மீது  சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றும் இந்த விவாகரத்தில் மனுதாரர் தனக்கு தேவையான இழப்பீட்டை  நுகர்வோர்நீதிமன்றத்தை அல்லது உரிய துறையை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்.

இந்த கட்டுரை abplive ஆல் வெளியிடப்பட்டது மற்றும் சுகாதாரம் செய்திகளை உள்ளடக்கியது.