
மதுரை அரசு மருத்துவமனை அலட்சியம்: "பணம் கேட்டனர்; இளைஞர் உயிரிழந்தார்!" - உறவினர்கள் கதறல்
மதுரையில் பைக் விபத்தில் சிக்கி காலில் எலும்பு முறிவு - சிகிச்சையில் இருந்த இளைஞர் உயிரிழப்பு - உரிய சிகிச்சை அளிக்கவில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டு.பேரிகார்டு மீது மோதி விபத்துமதுரை மாநகர் எல்லிஸ்நகர் ஆஞ்சநேயர் கோவில் தெரு பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன்(37) கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது நண்பருடன் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்றபோது பைபாஸ் சாலை துரைச்சாமி நகர் பகுதியில் பைக் பஸ்சை முந்திசென்றபோது பேரிகார்டு மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது பரமேஸ்வரனுக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதோடு கையில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து பரமேஸ்வரனை மதுரை அரசு ராஜாஜி அவசர விபத்து சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து 4 நாட்களாக அவசர சிகிச்சை வார்டில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கால்களில் மட்டும் கட்டுப்போடப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உரிய சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்கள் அலட்சியம்இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கையில் இருந்த காயத்திற்கு கூட மருந்து அளிக்காமல் உரிய சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்டதால் பரமேஸ்வரன் உயிரிழந்ததாக குற்றம்சாட்டினர். இதனைத்தொடர்ந்து உயிரிழந்த இளைஞர் பரமேஸ்வரனின் குடும்பத்தினருடன் அரசு ராஜாஜி மருத்துவ அலுவலர் சரவணன் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைப்பெற்றுவந்த இளைஞர் உயிரிழந்த நிலையில் அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் தனது மகன் இறந்துவிட்டதாக கூறி கதறி அழுதார். இதனிடையே உயிரிழந்த பரமேஸ்வரின் உடலானது உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. காலில் நரம்பில் ஏற்பட்ட பிரச்சனையால் உயிரிழப்பு இதுகுறித்து அரசு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளித்த போது காலில் நரம்பில் ஏற்பட்ட பிரச்சனையால் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும், தெரிவித்துள்ளனர். உடற்கூராய்விற்கு பின்பு முழுமையான தகவல் தெரிய வரும் எனவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய பரமேஸ்வரனின் சகோதரர் ரமேஷ் மற்றும் சகோதரி கார்த்திகா : 5 நாட்களாக எந்த சிகிச்சையும் தரல, ஹார்ட்ல சோறு அடைச்சு இறந்துட்டாருனு ஒரு டாக்டர் சொல்றாரு , இன்னொரு டாக்டர் மதுவால் இறந்துட்டாரு என மாற்றி மாற்றி கூறுகின்றனர். ஸ்ட்ரெச்சர் தள்ள 200 ரூபாய், கட்டுப்போட 500 ரூபாய், கட்டுபோடுவதற்கு ஸ்கேல் வாங்க சொல்றாங்க, மருந்து, மாத்திரை எல்லாமே வாங்க சொல்றாங்க என் தம்பியோட உயிர்போறது தான் கடைசியா இருக்கட்டும், இனியாவது சரி பண்ணுங்க, என் தம்பியின் இழப்புக்கு தீர்வு கிடைக்கனும் அதுவரை உடலை வாங்கமாட்டோம், GHனு வர்றோம் ஆனா எல்லாத்துக்குமே இங்க , காசுதான் பேசுது, மருத்துவமனையில் நாய போல எங்களை பேசுறங்க , மனுசனா மனுசனாகவே மதிக்கமாட்றாங்க சார், கேஸ் சீட்ட கூட தொலைச்சுட்டாங்க நாங்க கண்டுபிடிச்சு கொடுத்தோம் சார் என குற்றம்சாட்டினர்.
இந்த கட்டுரை abplive ஆல் வெளியிடப்பட்டது மற்றும் சுகாதாரம் செய்திகளை உள்ளடக்கியது.