தமிழ் டைம்ஸ் logo
தற்கொலைக் குறிப்பில் பெயர்; `CEC ஞானேஷ் குமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை'- கேரள அரசு உத்தரவு!
5 அக்டோபர், 2026
vikatan
இந்தியா

தற்கொலைக் குறிப்பில் பெயர்; `CEC ஞானேஷ் குமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை'- கேரள அரசு உத்தரவு!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா உத்தரவிட்டுள்ளார்.தற்போதைய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 2006-ம் ஆண்டு கேரள பொதுப்பணித்துறைச் செயலாளராகப் பணியாற்றியிருக்கிரார். அப்போது, கேரள மாநில போக்குவரத்து திட்டத்தின் கீழ் எம்.சி. சாலையை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த PATI-BEL நிறுவனத்தைச் சேர்ந்த மலேசிய நாட்டின் சிவில் பொறியாளர் 'லீ சீ பீன்' (Lee See Been) தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவர் எழுதி வைத்த தற்கொலைக் குறிப்பில், ஞானேஷ் குமாரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ரமேஷ் சென்னிதலாஅந்த வழக்கை தற்போது கேரள அரசு கையில் எடுத்திருக்கிறது. இது தொடர்பாக வெளியாகியிருக்கும் செய்தியில், ஞானேஷ் குமார் மீதான புகார்கள் குறித்தும், இதில் ஏற்பட்ட வெளி அழுத்தங்கள் குறித்தும் விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு உள்துறை அமைச்சர் அலுவலகம் நேரடியாக அறிவுறுத்தியுள்ளது. இது குறித்துப் பேசிய ரமேஷ் சென்னிதலா, ``காங்கிரஸ் நிர்வாகி வேணுகோபால் என்பவர், கேரள பொதுப்பணித்துறைச் செயலாளராக ஞானேஷ் குமார் இருந்தபோது நடைபெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து எனக்கு மனு ஒன்றை அளித்திருந்தார். அம்மனுவில் மிகவும் தீவிரமான விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், இத்திட்டத்தில் பணியாற்றிய மலேசிய பொறியாளர் லீ தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக் கடிதத்தில் பொதுப்பணித்துறைச் செயலாளர் ஞானேஷ் குமாரின் பெயர் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அரசு சும்மா இருக்க முடியாது, இந்த விவகாரத்தில் நான் வேடிக்கைப் பார்க்க முடியாது. எனவே, அந்த மனுவின் விவரங்களை ஆராய்ந்து, நீதியை உறுதி செய்ய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு அனுப்பி வைத்துள்ளேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.``ஞானேஷ் குமார் குற்றவாளி; உச்ச நீதிமன்றமும் பதில் சொல்லியாக வேண்டும்" - EX பாஜக அமைச்சர் RK சிங் Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppbவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

இந்த கட்டுரை vikatan ஆல் வெளியிடப்பட்டது மற்றும் இந்தியா செய்திகளை உள்ளடக்கியது.