
இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி விலகுவதாக அறிவிப்பு
கொனேரு ஹம்பி விலகுவதாக அறிவிப்பு : மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழல் காரணமாக சைப்ரஸில் நடைபெறவுள்ள 2026-ம் ஆண்டு ஃபிடே மகளிர் கேண்டிடேட்ஸ் சதுரங்க போட்டியில் இருந்து விலகுவதாக இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி அறிவித்துள்ளார். எந்த ஒரு போட்டியும், அது எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும், தனிப்பட்ட பாதுகாப்பை விட மேலானது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு பதிலாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அன்னா முசிச்சுக் இந்தப் போட்டியில் பங்கேற்பார் என்று சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. Related Link மிரட்டலுக்கு மத்தியில் பாகிஸ்தான் சென்றடைந்த ஸ்மித் The post இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி விலகுவதாக அறிவிப்பு appeared first on https://www.newstamil.tv.
இந்த கட்டுரை newstamil ஆல் வெளியிடப்பட்டது மற்றும் விளையாட்டு செய்திகளை உள்ளடக்கியது.