தமிழ் டைம்ஸ் logo
'நாங்கள் பணிய மாட்டோம்' - `பாகுபலி’ பட காட்சியைப் பகிர்ந்த ஈரான் தூதரகம்! - பின்னணி என்ன?
5 அக்டோபர், 2026
vikatan
உலகம்

'நாங்கள் பணிய மாட்டோம்' - `பாகுபலி’ பட காட்சியைப் பகிர்ந்த ஈரான் தூதரகம்! - பின்னணி என்ன?

உலக அரசியல் மேடைகளிலும் தூதரக தகவல் தொடர்புகளிலும் பொதுவாகக் கடுமையான அறிக்கைகளும் மரபுசார்ந்த வார்த்தைகளுமே பயன்படுத்தப்படும். ஆனால், ஆந்திரா, தெலங்கானாவுக்குப் பொறுப்பான ஹைதராபாத் ஈரான் தூதரகம், சர்வதேச விவகாரங்களை இந்திய மக்களிடம் கொண்டு சேர்க்க இந்தியத் திரையுலகின் மாஸ் காட்சிகளைப் பயன்படுத்தும் புதிய ராஜதந்திரப் போக்கைக் கையில் எடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் ஈரான் அதிபர் பேசிய பேச்சை விளக்குவதற்காக அவர்கள் 'பாகுபலி' திரைப்படக் காட்சியைப் பயன்படுத்தியது உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.`பாகுபலி’ ஈரான் தூதரகம்என்ன நடந்தது?செப்டம்பர் 23 அன்று நியூயார்க்கில் நடைபெற்ற 81-வது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் உரையாற்றினார். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுடனான பதற்றம் நீடித்து வரும் சூழலில், "எங்கள் நாடு பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளது; ஆனால் எத்தகைய அச்சுறுத்தல்களுக்கும் தடைகளுக்கும் பணியாது. நாங்கள் யாருக்கும் தலைவணங்க மாட்டோம்" என்று பேசினார்.இந்த உரையை மேற்கோள்காட்டி, ஹைதராபாத்தில் உள்ள ஈரான் தூதரகம் தனது அதிகாரபூர்வ 'X' பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டது: "Dr. Pezeshkian, President of I.R Iran at UNGA: 'Will never bow our head or bend the knee' — Like Baahubali standing against the Kalakeyas, we also shed our own blood in sacrifice for the homeland."(ஐ.நா பொதுச்சபையில் ஈரான் அதிபர் டாக்டர் பெசெஷ்கியன்: 'நாங்கள் ஒருபோதும் தலைவணங்க மாட்டோம்'. காலகேயர்களை எதிர்த்து நின்ற பாகுபலியைப் போல, தாயகத்திற்காக நாங்களும் எங்கள் ரத்தத்தைச் சிந்தித் தியாகம் செய்வோம்.)Dr. Pezeshkian, President of I.R #Iran at UNGA: "Will never bow our head or bend the knee"Like Baahubali standing against the Kalakeyas, we also shed our own blood in sacrifice for the homeland. pic.twitter.com/xc1S9H346Q— Iran In Hyderabad (@IraninHyderabad) September 27, 2026 இப்பதிவோடு, 'பாகுபலி' படத்தின் முதல் பாகத்தில் அமரேந்திர பாகுபலி (பிரபாஸ்) தனது படைகளை வழிநடத்தி, எதிரியான 'காலகேய' படைகளைச் சிதறடிக்கும் உச்சக்கட்டப் போர்க்கள வீடியோ காட்சியை இணைத்திருந்தனர்.படத்தில் மகிழ்மதி நாட்டை ஆக்கிரமிக்க வரும் கொடூரமான அந்நியப் படையாக காலகேயர்கள் காட்டப்படுவார்கள். ஈரானிய தூதரகம் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளைத் திரைப்படத்தில் வரும் காலகேயர்களுடனும், தங்களைத் தாய்நாட்டைக் காக்கும் பாகுபலியாகவும் உருவகப்படுத்தியுள்ளது இணையவாசிகளிடையே விவாதத்தைக் கிளப்பியுள்ளது.ஈரான் தூதரகம்இது முதல்முறை அல்ல. சில நாட்களுக்கு முன்புதான் அமெரிக்கா தொடர்பான அரசியல் விவகாரத்தில், தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் அதிரடி திரைப்படக் காட்சி ஒன்றையும் ஈரான் தூதரகம் பகிர்ந்திருந்தது. அடுத்தடுத்து தெலுங்கு சினிமா ஹீரோக்களை ஈரான் தூதரகம் பயன்படுத்துவது தென்னிந்திய சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.இப்படத்தில் கட்டப்பா கதாபாத்திரத்திடம் ஒரு வெளிநாட்டு வணிகர் 'பாரசீக நாட்டு வாளை' விற்பனை செய்வது போன்ற ஒரு காட்சி வரும். "பாகுபலிக்கும் ஈரானுக்கும் அப்போதே தொடர்பு உண்டு" என நெட்டிசன்கள் அந்த வரலாற்று இணைப்பை நினைவு கூர்ந்துள்ளனர்.சிலர் "ஈரான் தூதரகத்தின் சோஷியல் மீடியா அட்மின் மாஸ் காட்டுகிறார்" என்றும், சிலர் "சர்வதேச அரசியலில் மேற்கத்திய நாடுகளைக் காலகேயர்களுடன் ஒப்பிடுவது துணிச்சலானது" என்றும் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர், "அசல் தெலுங்கு ஆடியோவையே வைத்திருக்கலாம்" எனவும், "கடைசியில் பாகுபலியை கட்டப்பாதானே கொல்வார்!" என்றும் கிண்டலாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.`பாகுபலி’ ஈரான் தூதரகம்உலக அரசியல் அரங்கில் அழுத்தங்களும் பொருளாதாரத் தடைகளும் தீவிரமடைந்துள்ள வேளையில், தங்களது நிலைப்பாட்டையும், பணிய மாட்டோம் என்ற செய்தியையும் உள்ளூர் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தென்னிந்திய சினிமாவின் பிரமாண்ட பிளாக்பஸ்டர் காட்சி மூலம் ஈரான் வெளிப்படுத்தியுள்ளது. பாரம்பரிய தூதரக பாணியை உடைத்து, பாப்-கலாசாரம் மற்றும் சினிமா மூலம் அரசியலைப் பேசும் இந்த உத்தி நவீன டிஜிட்டல் உலகில் ஒரு புதிய போக்காக உருவெடுத்துள்ளது.

இந்த கட்டுரை vikatan ஆல் வெளியிடப்பட்டது மற்றும் உலகம் செய்திகளை உள்ளடக்கியது.