தமிழ் டைம்ஸ் logo
``மின்சாரக் கொள்முதல் முதல் சாலை டெண்டர் வரை... இது டம்மி அரசு" - தவெக அரசைச் சாடும் எடப்பாடி
14 அக்டோபர், 2026
vikatan
இந்தியா

``மின்சாரக் கொள்முதல் முதல் சாலை டெண்டர் வரை... இது டம்மி அரசு" - தவெக அரசைச் சாடும் எடப்பாடி

செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்திருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சேலம் ஓமலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ``கடந்த காலங்களில் குறுகிய கால மின் கொள்முதல் ஒப்பந்தங்களில் அதிக விலை நிர்ணயிக்கப்பட்டு ஊழல் நடந்ததாகக் கூறி, அப்போதைய ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு வெள்ளை அறிக்கைகளும் வெளியிடப்பட்டன. ஆனால், தற்போது முந்தைய ஆட்சியின் விலையையும் விஞ்சி, இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.35 வரை வழங்கி மின் கொள்முதல் செய்கிறது இந்த அரசு.அமைச்சர் நிர்மல் குமார்ஏற்கனவே மின்வாரியம் சுமார் ரூ.2.48 லட்சம் கோடி கடனில் தத்தளித்து வரும் வேளையில், இத்தகைய அதிக விலை கொள்முதல் வாரியத்திற்கு மேலும் பல ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும். முந்தைய கொள்முதல் ஒப்பந்தங்களை முழுமையாக முறைப்படுத்தி தொடர்ந்திருந்தால் இந்த அவசர நிலை மற்றும் பெரும் நிதி இழப்பு தவிர்க்கப்பட்டிருக்கும்.``வாலில் தீப்பற்றிய குரங்குக் கூட்டம் போல அமைச்சரவை..." - தவெக அரசை சாடும் ஸ்டாலின்!கடந்த நான்கு மாதங்களாகத் திட்டமிட்டே மின்சாரம் கொள்முதல் செய்யாமல் தாமதப்படுத்தி, மாநிலத்தில் கடுமையான மின்வெட்டை ஏற்படுத்தி, எப்படியாவது மின்சாரம் கிடைத்தால் போதும் என்ற அவசரச் சூழலை மக்களுக்குச் செயற்கையாக உருவாக்கிய பிறகே, தடையற்ற மின்சாரம் வழங்குவது என்ற சாக்கில் இந்த அதிக விலை கொள்முதல் டெண்டர் விடப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே எந்தவொரு மாநிலமும் செய்யாத அளவிற்கு அதிக விலைக்கு ஒப்பந்தம் போட்டிருப்பது ஒரு மிகப்பெரிய மெகா ஊழல். மாநிலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து, ஏழை மற்றும் நடுத்தர மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. விலைவாசியைக் கட்டுப்படுத்த அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.முதல்வர் விஜய்இடைத்தேர்தல்களில் தவெக வெற்றி பெற்றிருந்தாலும், அது ஜனநாயகப்பூர்வமான வெற்றி அல்ல. தாராபுரத்தில் கடந்த முறையை விட 20,000 வாக்குகளும், மதுராந்தகத்தில் 10,000 வாக்குகளும் மட்டுமே கூடுதலாகப் பெற்ற தவெக-வுக்கு மக்களிடையே பெரிய செல்வாக்கு இல்லை என்பதையே காட்டுகிறது. சொந்தக் கட்சியில் முறையான கிளைகளோ, அடிப்படை நிர்வாக அமைப்புகளோ இல்லாத காரணத்தினாலேயே, சினிமா கவர்ச்சியை மட்டுமே நம்பியிருக்கும் தவெக, 20-30 ஆண்டுகளாக உழைத்த அதிமுக கிளைச் செயலாளர்களையும் ஒன்றியச் செயலாளர்களையும் இழுக்க "குதிரை பேரத்தில்" ஈடுபடுகின்றனர்.எம்.ஜி.ஆர் உருவாக்கிய, ஜெயலலிதா காத்த அதிமுக தொண்டர்களை எந்தக் கொம்பனாலும் அசைக்கவோ, ஆட்டவோ முடியாது. பிரிட்டிஷ் காலத்தில் மேட்டூர் அணையைக் கட்ட ஆன செலவு எவ்வளவோ, அந்தளவு ரூ.4.5 கோடி வரைசெலவு செய்து சேலத்திற்குத் தனி விமானத்தில் வந்து மேட்டூர் அணையைத் திறந்தது விளம்பர அரசியலின் உச்சகட்டம். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடகாவிடம் இருந்து பெற வேண்டிய பாக்கி 12 டி.எம்.சி தண்ணீரைப் பெற அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சமீபத்தில் சென்னை வந்த பாரதப் பிரதமரைத் தமிழக முதலமைச்சர் சந்தித்தபோதும், காவேரி நீர் உரிமையைப் பெற வேண்டும் என ஒரு வார்த்தை கூடப் பேசாமல் மெளனம் காத்தது இந்த அரசின் திறமையின்மையைக் காட்டுகிறது. எடப்பாடி பழனிச்சாமிபொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஏற்கனவே போடப்பட்ட சாலை விரிவாக்க டெண்டர்களை ரத்து செய்துவிட்டு, பணிகளைப் பாதியிலேயே போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். தற்போது தார், டீசல், ஜல்லி, எம்-சாண்ட் மற்றும் ஆட்கூலி 40% வரை உயர்ந்துள்ள நிலையில், மீண்டும் புதிய டெண்டர் விடும்போது அரசுக்கு மிகப்பெரிய நிதி இழப்பு ஏற்படும். மின்சாரக் கொள்முதல் முதல் சாலை டெண்டர் வரை அனைத்திலும் குளறுபடிகளைச் செய்து, எவ்வித வளர்ச்சியுமின்றி இயங்கும் இந்த அரசை ஒரு டம்மி அரசாகதான் மக்கள் பார்க்கிறார்கள்" என்றார்.மின்சாரம்: 'வரலாற்றிலேயே இல்லாத அதிக விலை' - தவெக அரசின் முடிவு சரியா? தவறா?| அலசல்Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppbவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

இந்த கட்டுரை vikatan ஆல் வெளியிடப்பட்டது மற்றும் இந்தியா செய்திகளை உள்ளடக்கியது.