தமிழ் டைம்ஸ் logo
“Love பண்ணுங்க சார்... Life நல்லா இருக்கும்”- இளைஞர்களுக்காக Dating App தொடங்கிய சிங்கப்பூர் அரசு!
7 அக்டோபர், 2026
vikatan
அழகியல்

“Love பண்ணுங்க சார்... Life நல்லா இருக்கும்”- இளைஞர்களுக்காக Dating App தொடங்கிய சிங்கப்பூர் அரசு!

“காதலிக்க ஆள் கிடைக்கல… கல்யாணத்துக்கு ஆள் கிடைக்கல…” என்று இளைஞர்கள் புலம்புவதைப் பார்த்திருப்போம். ஆனால், இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வதை ஊக்குவிக்க அரசாங்கமே Dating App தொடங்கினால்? சிங்கப்பூரில் அதுதான் நடந்திருக்கிறது!அந்நாட்டில் திருமணங்களும், பிறப்பு விகிதமும் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், அரசு ஊழியர்களுக்காக ‘FirstDate’ என்ற புதிய Dating தளத்தை சிங்கப்பூர் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த சோதனைத் திட்டம் 21 முதல் 35 வயதுடைய திருமணமாகாத அரசு ஊழியர்களை இலக்காகக் கொண்டுள்ளது. மற்ற Dating Apps போல தொடர்ந்து Profile-களை Swipe செய்துகொண்டே இருக்க வேண்டியதில்லை. பயனர்களின் ஆர்வங்கள், பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, விருப்பங்கள் மற்றும் பிடிக்காத விஷயங்கள் போன்ற தகவல்களின் அடிப்படையில் பொருத்தமான நபர்களைத் தேர்வு செய்யும் வகையில் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.இதில் தங்களுடைய Profile-ஐ யார் பார்க்கலாம் என்பதையும் பயனர்களே கட்டுப்படுத்த முடியும். மேலும், சந்தித்த பிறகு அந்த Date எப்படி இருந்தது என்பதை Star Rating மற்றும் Feedback மூலம் தெரிவிக்கலாம். தொடர்பு விவரங்களைப் பகிர்வதும் பயனர்களின் விருப்பம்தான். இதற்கெல்லாம் காரணம் சிங்கப்பூரின் மக்கள் தொகை பிரச்னைதான். 2024-ல் 0.97 ஆக இருந்த மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate), 2025-ல் 0.87 ஆகக் குறைந்துள்ளது. திருமணங்களும் தொடர்ந்து குறைந்தே வருகின்றன. மேலும், அந்நாட்டில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மக்கள் தொகையில் 21 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ளதால், சிங்கப்பூர் ‘Super-aged Society’ என்ற நிலையை எட்டியுள்ளது.இந்த நிலையை மாற்றி, இளைஞர்களை திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கையை நோக்கி அழைத்துச் செல்லும் இந்த முயற்சியை சிங்கப்பூர் அரசு எடுத்துள்ளது. இனி இந்த Dating App மூலம் எத்தனை ஜோடிகள் இணைய போகிறார்கள் என்பதுதான் சுவாரஸ்யமான எதிர்பார்ப்பு!உலகிலேயே அதிக சம்பளம் பெறும் அரசுத் தலைவர்; சிங்கப்பூர் பிரதமரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்த கட்டுரை vikatan ஆல் வெளியிடப்பட்டது மற்றும் அழகியல் செய்திகளை உள்ளடக்கியது.