தமிழ் டைம்ஸ் logo
'இது எளிதான முடிவு அல்ல, மன அமைதியுடன் நான் விடைபெறுகிறேன்.!'- ஹர்மன்ப்ரீத் கவுர் எமோஷனல்
7 அக்டோபர், 2026
vikatan
விளையாட்டு

'இது எளிதான முடிவு அல்ல, மன அமைதியுடன் நான் விடைபெறுகிறேன்.!'- ஹர்மன்ப்ரீத் கவுர் எமோஷனல்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஹர்மன்ப்ரீத் கவுர் அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அனைத்து வடிவங்களின் கேப்டன் பொறுப்புகளில் இருந்தும் நான் விலகுகிறேன். இது எளிதான முடிவு அல்ல. இதில் என் வாழ்நாள் முழுவதும் என்னோடு நிலைத்திருக்கும் பல ஆண்டுகளின் நினைவுகள், உணர்வுகள், தியாகங்கள் மற்றும் தருணங்கள் அடங்கியுள்ளன. ஹர்மன்ப்ரீத் கவுர்இந்திய மகளிர் அணிக்காக என் ரத்தம், வியர்வை, நேரம் என அனைத்தையும் கொடுத்தேன். ஒரு கேப்டனாக, நான் சில கடினமான முடிவுகளை எடுத்திருக்கிறேன். நான் எடுத்த ஒவ்வொரு முடிவும் இந்திய அணியை சிறப்பாக மாற்றுவதற்காகத் தான். மிகவும் மோசமான தருணங்கள், மனமுறிவுகள், விமர்சனங்கள், சந்தேகங்கள் போன்ற நாட்களை நான் பார்த்திருக்கிறேன். அதே சமயம் மிகச்சிறந்த தருணங்களையும் அனுபவித்திருக்கிறேன். உணர்வுகள் நிறைந்த இதயத்துடன், அதே வேளையில் மன அமைதியுடன் இன்று நான் கேப்டன் பொறுப்பில் இருந்து விடைபெறுகிறேன். 'கீதா கோவிந்தம் படத்தின் முதல் நாள்... விஜய் தேவரகொண்டா கோபப்பட்டு கத்திவிட்டார்; நான்.!" - ராஷ்மிகாஎன் அணி ஒரு நல்ல நிலையில் இருக்கிறது என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். திறமை, நம்பிக்கை மற்றும் ஒரு சிறந்த எதிர்காலம் கொண்ட ஒரு அணி இந்திய அணி. அதில் ஒரு அங்கமாக இருக்க நான் மிகவும் ஆவலாக உள்ளேன். என் கடமையை நான் செய்து முடித்துவிட்டதாக உணர்கிறேன். இந்த அணிக்கு என்னிடம் இருந்த அனைத்தையும் கொடுத்திருக்கிறேன். பெருமையுடன் இந்த பொறுப்பை சுமந்தேன், மேலும் இந்திய மகளிர் கிரிக்கெட்டை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்ததற்கு நான் எப்போதும் நன்றியுள்ளவளாக இருப்பேன். ஹர்மன்ப்ரீத் கவுர் என்னுடய கேப்டன் பதவி இன்றுடன் முடிவடையலாம், ஆனால் இந்திய கிரிக்கெட் மீதான என் அன்பு என்றும் முடிவடையாது. உயர்வுகளிலும் தாழ்வுகளிலும் என்னுடன் உறுதுணையாக நின்ற ஒவ்வொரு சக வீரர், பயிற்சியாளர், உதவி ஊழியர்கள், நிர்வாகம், பிசிசிஐ குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஒவ்வொரு ரசிகருக்கும் எனது நன்றிகள். மீண்டும் விளையாட நான் தயாராக இருக்கிறேன். கேப்டன் பதவி முடிகிறது. பயணம் தொடர்கிறது" எமோஷனலாகப் பதிவிட்டிருக்கிறார்.சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglRசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

இந்த கட்டுரை vikatan ஆல் வெளியிடப்பட்டது மற்றும் விளையாட்டு செய்திகளை உள்ளடக்கியது.