தமிழ் டைம்ஸ் logo
இந்து மதம் மாறிய முஸ்லிம் பெண்ணின் விவாகரத்து மனு நிராகரிப்புக்கு ஐகோர்ட் கண்டிப்பு
21 நவம்பர், 2025
feedburner
தமிழ்நாடு

இந்து மதம் மாறிய முஸ்லிம் பெண்ணின் விவாகரத்து மனு நிராகரிப்புக்கு ஐகோர்ட் கண்டிப்பு

சென்னை: இந்து மதத்துக்கு மாறிய முஸ்லிம் மனைவியின் விவாகரத்து மனுவை நிராகரித்த குடும்ப நல நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கணவன், மனைவி இருவரும் திருமணம் செய்துகொண்டு சில மாதங்களுக்கு பிறகு பரஸ்பர விவாகரத்து கோரி அம்பத்துார் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், ஆவணங்களை ஆராய்ந்து பார்த்த போது,கணவன் இந்து என்றும், மனைவி முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் என்றும், எனவே பரஸ்பர விவாகரத்து வழங்க முடியாது என்றும் தீர்ப்பு கூறியது.

இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் தமிழ்நாடு செய்திகளை உள்ளடக்கியது.