
ஆசிரியர் தகுதித் தேர்வு தொடங்கியது: முதல் தாள் தேர்வில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பு; 1,241 மையங்களில் இன்று 2-ம் தாள் தேர்வு
சென்னை: ஆசிரியர் பணித் தகுதிக்கான டெட் தேர்வு நேற்று தொடங்கியது. முதல் தாள் தேர்வில் சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு எளிதாக இருந்ததாக தேர்வர்கள் கூறியுள்ளனர். 2-ம் தாள் தேர்வு இன்று நடைபெறுகிறது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அனைத்து விதமான பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகுதித் தேர்வில் (டெட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்படுகிறது. எனினும், கடந்த 2 ஆண்டுகளாக டெட் தேர்வு நடத்தப்படவில்லை.
இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் கல்வி செய்திகளை உள்ளடக்கியது.