
அமைச்சருடன் விமானத்தில் பயணித்த குழந்தைகள்
தூத்துக்குடி: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சென்னையை சேர்ந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய 30 குழந்தைகள் அமைச்சர் பி.கீதாஜீவனுடன் விமானத்தில் பயணித்தனர். ரெயின் டிராப்ஸ் அறக்கட்டளை ‘வானமே எல்லை' எனும் திட்டத்தின் கீழ் அனந்தம் நிறுவனம், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் வேல்ஸ் வித்யாலயா கல்விக் குழுமம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த விமானப் பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. சென்னையில் இருந்து 30 குழந்தைகள் தங்கள் முதல் விமானப் பயணத்தை நேற்று காலை தொடங்கினர். தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் அக்குழந்தைகளுடன் பயணித்து, அவர்களுடன் கலந்துரையாடி உற்சாகமூட்டினார்.
இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் கல்வி செய்திகளை உள்ளடக்கியது.