தமிழ் டைம்ஸ் logo
நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும்: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்
21 நவம்பர், 2025
feedburner
தமிழ்நாடு

நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும்: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: விவசாயிகளின் நலன்கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு குறுவை பருவத்தில் அதிக நெல் உற்பத்தி மற்றும் கொள்முதலில் சாதனை படைத்துள்ளதையடுத்து விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்தி விரைந்து ஆணை வழங்கிடவும், செறிவூட்டப்பட்ட அரிசி மணிகளின் மாதிரி எடுக்கும் அதிகாரத்தை தென்னிந்திய மாநிலங்களில் உள்ள இந்திய உணவுக் கழக அதிகாரிகளுக்கு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் தமிழ்நாடு செய்திகளை உள்ளடக்கியது.