
எஸ்ஐஆர்-ஐ கண்டித்து விசிக சார்பில் நவ. 24-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் தகவல்
சென்னை: எஸ்ஐஆர்-ஐ கண்டித்து விசிக சார்பில் வரும் 24-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் தெரிவித்தார். சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் திருமாவளவன், அபுதாபியில் நடைபெற உள்ள குத்து சண்டை போட்டியில் பங்குபெற உள்ள இரண்டு வீராங்கனைகளுக்கு தலா ரூ. 75 ஆயிரம் வழங்கிய பின் நிருபர்களிடம் கூறியதாவது: பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் என இரண்டு நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து எஸ்ஐஆர் திட்டத்தை கொண்டு வந்து உள்ளனர். தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளை கைவிட வேண்டும் என விசிக தொடரந்து வலியுறுத்தி வருகிறது. அதற்கு காரணம், மிக குறுகிய காலம் மட்டுமே உள்ளது. குறுகிய காலத்தில் வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சேர்ப்பது சவாலாக உள்ளது.
இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் தமிழ்நாடு செய்திகளை உள்ளடக்கியது.