
வங்கி அதிகாரிகள் முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்தால் கடும் நடவடிக்கை: சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை
சென்னை: போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு, வங்கிக் கடன் பெற்று மோசடி, போலி நகைகளை அடமானம் வைத்து மோசடி உட்பட பல்வேறு வகையான மோசடிகள் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தினமும் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தொடர்புடைய மோசடிக்காரர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படுகின்றனர். தொடர் விசாரணையில் பெரும்பாலான மோசடி வழக்குகளின் பின்னணியில் ஏதாவது ஒரு வங்கி ஊழியர் அல்லது வங்கி அதிகாரி இருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது. முன்பு அவர்களை போலீஸார் எச்சரித்து வழக்குப் பதியாமல் அனுப்பிவிடுவார்கள்.
இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் தமிழ்நாடு செய்திகளை உள்ளடக்கியது.