
யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் வென்ற பார்வை மாற்றுத்திறன் பி.ஹெச்டி மாணவர் முனியாண்டி!
கரூர்: கரூர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஹெச்டி ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் பார்வை மாற்றுத் திறன் மாணவர், யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகேயுள்ள கூட்டக்காரன்பட்டி என்கிற சித்திரப்பள்ளியைச் சேர்ந்தவர் சி.முனியாண்டி (30). கரூர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஹெச்டி ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வரும் இவர், அண்மையில் வெளியான யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தமிழகத்தில் தேர்ச்சி பெற்ற 155 பேரில் ஒருவர். கரூர் அரசு கலைக் கல்லூரியில் 2012-15-ம் ஆண்டுகளில் பி.ஏ. தமிழ் படித்த இவர், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பி.எட். கல்லூரியில் 2015- 17-ம் ஆண்டில் பி.எட்., படித்தார்.
இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் கல்வி செய்திகளை உள்ளடக்கியது.