
21 நவம்பர், 2025
feedburner
தமிழ்நாடு‘அதிமுக வாக்குகள் தான் அதிகம் காலியாகப் போகிறது!’ - சீமான் புதிய கண்டுபிடிப்பு
தங்கள் எஜமானர் கொண்டு வந்தது என்பதால் எஸ்ஐஆரை பழனிசாமி ஆதரிக்கிறார். ஆனால், அதிகப்படியாக அவரது வாக்குகள் தான் காலியாகப் போகிறது என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கள்ள ஓட்டுப் போட்டது, ஓட்டுக்கு காசு கொடுத்தது எல்லாம் தேர்தல் ஆணையத்துக்குத் தெரியாதா? இதை எல்லாம் தேர்தல் ஆணையத்தால் சரிசெய்ய முடியவில்லை. ஜனநாயக நாட்டில் வாக்குரிமை தான் மக்களுக்கு உள்ள உரிமை. அதை இவ்வளவு தான்தோன்றித்தனமாக பதிவு செய்துகொடுத்துவிட்டு போ எனச் சொல்வது எப்படிச் சரியாகும்?
இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் தமிழ்நாடு செய்திகளை உள்ளடக்கியது.