தமிழ் டைம்ஸ் logo
‘கிங்’ தலைவர் Vs ‘சேகர’மான மாண்புமிகு | உள்குத்து உளவாளி
21 நவம்பர், 2025
feedburner
தமிழ்நாடு

‘கிங்’ தலைவர் Vs ‘சேகர’மான மாண்புமிகு | உள்குத்து உளவாளி

ஆலயக் கட்சியில் சென்னை மண்டலத்தைக் கவனிக்கும் பொறுப்பில் இருக்கும் ‘கிங்’ தலைவருக்கும் ‘சேகர’மான மாண்புமிகுவுக்கும் இடையில் வெடித்த மோதல் உரசிக்கிட்டே போகுதாம். முதன்மையானவரே தலையிட்டு சாந்தப் படுத்தியும் இருவரும் அதிகார அங்குசத்தை இன்னும் கீழே வைக்க வில்லையாம். சமீபத்தில், தேர்தல் பணிகள் தொடர்பாக தலைநகர் மண்டலக் கூட்டத்தைக் கூட்டினாராம் ‘கிங்’ தலைவர். அனைத்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தை, மாவட்டப் பொறுப்பிலும் இருக்கும் ‘சேகர’மானவர் மட்டும், இவரெல்லாம் கூட்டம் போட்டு நான் போறதா என்ற கெத்துடன் புறக்கணித்து விட்டாராம். அப்படியும் விடாமல், ‘கிங்’ தரப்பிலிருந்து போனைப் போட்டு விசாரித் தார்களாம்.

இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் தமிழ்நாடு செய்திகளை உள்ளடக்கியது.