
கோவைக்கு இன்று வரும் பிரதமர் மோடியை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வரவேற்கிறார்
கோவை: கோவைக்கு இன்று (நவ. 19) வரும் பிரதமர் மோடியை, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வரவேற்கிறார். தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் இயற்கை விவசாயிகள் மாநாடு இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைக்கிறார். இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மதியம் 1.25 மணிக்கு புட்டபர்த்தியில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். கோவை விமான நிலையத்தில் பிரதமரை, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.
இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் தமிழ்நாடு செய்திகளை உள்ளடக்கியது.