தமிழ் டைம்ஸ் logo
டெட் தேர்வுகளின் வினாத் தாள்கள் எளிது: இந்த முறை தேர்ச்சி அதிகரிக்க வாய்ப்பு
21 நவம்பர், 2025
feedburner
கல்வி

டெட் தேர்வுகளின் வினாத் தாள்கள் எளிது: இந்த முறை தேர்ச்சி அதிகரிக்க வாய்ப்பு

சென்னை: ஆசிரியர் பணித் தகு​திக்​கான டெட் தேர்​வின் 2 வினாத்​தாள்​களும் எளிமை​யாக இருந்​த​தால் இந்த முறை தேர்ச்சி அதி​கரிக்க வாய்ப்​புள்​ள​தாக பட்​ட​தா​ரி​கள் கருத்து தெரி​வித்​தனர். இலவச கட்​டாயக்​கல்வி உரிமைச் சட்​டத்​தின்​படி அனைத்​து​வித பள்​ளி​களி​லும் இடைநிலை, பட்​ட​தாரி ஆசிரியர் பணி​யில் சேர தகு​தித்​தேர்​வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்​டும். இந்த டெட் தேர்வு மொத்​தம் 2 தாள்​களை கொண்​டது. முதல் தாளில் தேர்ச்சி பெறு​பவர்​கள் இடைநிலை ஆசிரிய​ராக​வும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்​கள் பட்​ட​தாரி ஆசிரிய​ராக​வும் பணிபுரிய​லாம். தமிழகத்​தில் கடந்த 2 ஆண்​டு​களாக டெட் தேர்வு நடத்​தப்​பட​வில்​லை.

இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் கல்வி செய்திகளை உள்ளடக்கியது.