தமிழ் டைம்ஸ் logo
நடைபயணத்தில் திமுக ஆட்சி நீடிக்க வலியுறுத்துவேன் - வைகோ தகவல்
21 நவம்பர், 2025
feedburner
தமிழ்நாடு

நடைபயணத்தில் திமுக ஆட்சி நீடிக்க வலியுறுத்துவேன் - வைகோ தகவல்

“திருச்சி - மதுரை இடையே மேற்கொள்ளும் நடைபயணத்தின்போது, திராவிட இயக்கத்தை பாதுகாக்க திமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்துவேன்” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். போதைப்பொருள் ஒழிப்பு, சாதி மோதல் தடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் திருச்சியிலிருந்து மதுரை வரை ஜன. 2 முதல் 12-ம் தேதி வரை சமத்துவ நடைபயணம் நடைபெற உள்ளது. நடைபயணத்தில் பங்கேற்க உள்ள இளைஞர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணலை மதுரையில் வைகோ நேற்று நடத்தினார்.

இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் தமிழ்நாடு செய்திகளை உள்ளடக்கியது.