தமிழ் டைம்ஸ் logo
பிஹாரில் கடந்த முறையைவிட பெண் எம்எல்ஏக்கள் அதிகம்
21 நவம்பர், 2025
feedburner
இந்தியா

பிஹாரில் கடந்த முறையைவிட பெண் எம்எல்ஏக்கள் அதிகம்

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் ஏற்கெனவே எம்எல்ஏ-வாக இருந்த 111 பேர் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் வெற்றி பெற்றவர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவில் இடம்பெற்றுள்ள தகவலை ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆய்வு செய்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களைவிட இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் சற்று வயதானவர்கள் ஆவர். கடந்த முறை வென்ற எம்எல்ஏ-க்களின் சராசரி வயது 52 ஆக இருந்த நிலையில் இந்த முறை 53 ஆக அதிகரித்துள்ளது. இதுபோல கடந்த முறை வென்றவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.4.32 கோடியாக இருந்தது. இது இந்த முறை இரு மடங்காகி ரூ.9.02 கோடியாகி உள்ளது.

இந்த கட்டுரை feedburner ஆல் வெளியிடப்பட்டது மற்றும் இந்தியா செய்திகளை உள்ளடக்கியது.