தமிழ் டைம்ஸ் logo
முகப்புக்கு திரும்பு

tamil-nadu

43 கட்டுரைகள் tamil-nadu இல்

விளம்பர இடம்

உங்கள் விளம்பரத்தை இங்கே காட்சி செய்யலாம்

“அதிமுகவையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு வந்திருக்கிறது!” - மருது அழகு ராஜ் பேட்டி
தமிழ்நாடு

“அதிமுகவையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு வந்திருக்கிறது!” - மருது அழகு ராஜ் பேட்டி

ஓபிஎஸ் பக்கம் இருந்துவிட்டு அண்மையில் திமுக-வில் இணைந்தவர் ‘நமது அம்மா’ நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகு ராஜ். எழுத்திலும் பேச்சிலும் எதிரணியை எதுகை மோனையுடன் எதவாக தாக்குவதில் வல்லவரான இவரை மாநில செய்தித் தொடர்புக் குழு துணைத் தலைவராக நியமித்திருக்கிறது திமுக. அவரிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம். ஆளும் கட்சியாக இருக்கும் திமுக எஸ்ஐஆரைக் கண்டு ஏன் பயப்படுகிறது?

feedburner
21 நவ.
3 min read
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: நவ.23, 24-ல் வட மாவட்டங்கள், டெல்டாவில் கனமழை
தமிழ்நாடு

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: நவ.23, 24-ல் வட மாவட்டங்கள், டெல்டாவில் கனமழை

சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி குமரிக்கடல் மற்றும் அதையொட்டி பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும். தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வரும் 22-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும். வரும் 22, 23-ல் கடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

feedburner
21 நவ.
3 min read
எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு: தேர்தல் ஆணையத்துக்கு விடுக்கப்படும் மறைமுக மிரட்டல் - பாஜக சாடல்
தமிழ்நாடு

எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு: தேர்தல் ஆணையத்துக்கு விடுக்கப்படும் மறைமுக மிரட்டல் - பாஜக சாடல்

சென்னை: தேர்தல் கமிஷனின் வாக்காளர் சிறப்பு தீவிர சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக அரசு ஊழியர்களை மறைமுகமாக செயல்பட தமிழக அரசு நிர்வாகம் ஊக்குவிக்கக் கூடாது என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கடந்த 4-ம் தேதி முதல் எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர வாக்காளர் சீர்திருத்தம் "SIR" குறித்தும், போலி வாக்காளர்களை நீக்கி வாக்களிக்க தகுந்தவர்களின் வாக்களிக்கும் உரிமையை நிலைநாட்டும் தேர்தல் கமிஷனின் செயல்பாட்டுக்கும், களங்கம் கற்பிக்கும் வகையில், ஒவ்வொரு நாளும் இது குறித்து கற்பனையான குற்றச்சாட்டுகளை கூறி, அவதூறு பிரச்சாரம் செய்து மக்களை குழப்பம் தமிழக முதல்வர் ஸ்டாலின், பிஹார் தேர்தலின் முடிவுகளுக்கு பிறகாவது இதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்.

feedburner
21 நவ.
3 min read
கோவை மாவட்டத்தில் அதிமுகவை வீழ்த்த வேண்டும்: நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு
தமிழ்நாடு

கோவை மாவட்டத்தில் அதிமுகவை வீழ்த்த வேண்டும்: நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

சட்​டப் பேர​வைத் தேர்​தலில் கோவை மாவட்​டத்​தில் பெரும்​பான்​மை​யான தொகு​தி​களில் வெற்றி பெற வேண்​டுமென முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நிர்​வாகி​களுக்கு உத்​தர​விட்​டார். சட்​டப்​பேரவைத் தேர்​தலை முன்​னிட்டு திமுக சார்​பில் ‘உடன்​பிறப்பே வா’ எனும் பெயரில் திமுக நிர்​வாகி​களை தொகுதி வாரி​யாக அறி​வால​யத்​தில் சந்​தித்து பேசி வரு​கி​றார் திமுக தலை​வர் ஸ்டா​லின். இது​வரை 86 தொகு​தி​களின் நிர்​வாகி​களு​டன் ‘ஒன் டு ஒன்’ சந்​தித்து நேரடி ஆலோ​சனை நடத்​தி​யுள்​ளார். இந்த சந்​திப்​பின் போது, முன்​வைக்​கப்​படும் குறை​களை சரிசெய்ய திமுக தலைமை உரிய நடவடிக்​கை​களை​யும் எடுத்து வரு​கிறது.

feedburner
21 நவ.
3 min read
பெண்கள் மாணவிகளால் இந்த ஆட்சி முடிவுக்கு வரும் - ஜி.கே.வாசன் நம்பிக்கை
தமிழ்நாடு

பெண்கள் மாணவிகளால் இந்த ஆட்சி முடிவுக்கு வரும் - ஜி.கே.வாசன் நம்பிக்கை

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் கிடைத்த ஒட்டுமொத்த வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று சந்தித்து பேசினார். பின்னர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவரான அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சேலம் வரும்போது மரியாதை நிமித்தமாக சந்திப்பது வழக்கம். கூட்டணி கட்சி தலைவரான பழனிசாமி, மாநிலம் முழுவதும் 173 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு சென்று மக்களின் எண்ணங்களை மிகத் தெளிவாக பிரதிபலித்திருக்கிறார். திமுக-வுக்கு தமிழகத்தில் எதிர்மறை வாக்குஅதிகரிக்க அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மக்களுக்கு கொடுத்த விழிப்புணர்வு தான் காரணம்.

feedburner
21 நவ.
3 min read
ராமதாஸ் போல் ஒரு நாள் வைகோவும் மகனால் வருந்துவார்: மல்லை சத்யா தாக்கு
தமிழ்நாடு

ராமதாஸ் போல் ஒரு நாள் வைகோவும் மகனால் வருந்துவார்: மல்லை சத்யா தாக்கு

மதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா நேற்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவையில் நவம்பர் 20-ம் தேதி எங்கள் பயணம் அரசியல் கட்சியா,இயக்கமா அல்லது சங்கமா என்பதை அறிவிக்க உள்ளோம். திராவிட இயக்க கருத்தியலில் இருந்து பின் வாங்கக்கூடாது என உறுதியாக இருக்கிறோம். கார்ப்பரேட் அரசியல்வாதியாக துரை வைகோ இருக்கிறார். துரை வைகோ மீது இன்னும் மதிமுக-வில் பலர் எதிர்ப்பு மனநிலையில் உள்ளனர். மாமல்லபுரத்தில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. துரை வைகோவும் அரசியலில் பயிற்சி விமானி போன்று தான். மதிமுக-வில் இருந்து வெளியேறிய பின்னர் என்னுடன் இருந்த தோழர்கள் அனைவரும் திமுக-வில் இணைய வேண்டும் என்றே விரும்பினர். அது திமுக கூட்டணியை பலவீனப்படுத்தி, சங் பரிவார் அமைப்புகளுக்கு சாதகமாக மாறும் என்பதால் அதை செய்யவில்லை.

feedburner
21 நவ.
3 min read
கோவையில் பிரதமர் மோடியை வரவேற்கும் பழனிசாமி - அரசியல் முக்கியத்துவம் என்ன?
தமிழ்நாடு

கோவையில் பிரதமர் மோடியை வரவேற்கும் பழனிசாமி - அரசியல் முக்கியத்துவம் என்ன?

கோவை: கோவைக்கு நாளை (நவ.19) வரும் பிரதமர் மோடியை, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வரவேற்கிறார். தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், இயற்கை விவசாயிகள் மாநாடு, கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நாளை (நவ.19) தொடங்கி மூன்று நாட்கள் நடக்கின்றன. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை மதியம் 1.25 மணிக்கு புட்டபர்த்தியில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார்.

feedburner
21 நவ.
3 min read
‘அதிமுக வாக்குகள் தான் அதிகம் காலியாகப் போகிறது!’ - சீமான் புதிய கண்டுபிடிப்பு
தமிழ்நாடு

‘அதிமுக வாக்குகள் தான் அதிகம் காலியாகப் போகிறது!’ - சீமான் புதிய கண்டுபிடிப்பு

தங்கள் எஜமானர் கொண்டு வந்தது என்பதால் எஸ்ஐஆரை பழனிசாமி ஆதரிக்கிறார். ஆனால், அதிகப்படியாக அவரது வாக்குகள் தான் காலியாகப் போகிறது என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கள்ள ஓட்டுப் போட்டது, ஓட்டுக்கு காசு கொடுத்தது எல்லாம் தேர்தல் ஆணையத்துக்குத் தெரியாதா? இதை எல்லாம் தேர்தல் ஆணையத்தால் சரிசெய்ய முடியவில்லை. ஜனநாயக நாட்டில் வாக்குரிமை தான் மக்களுக்கு உள்ள உரிமை. அதை இவ்வளவு தான்தோன்றித்தனமாக பதிவு செய்துகொடுத்துவிட்டு போ எனச் சொல்வது எப்படிச் சரியாகும்?

feedburner
21 நவ.
3 min read
பிஹார் தோல்வி பிடிக்குள் சிக்கிய காங். - என்ன செய்யப் போகிறது திமுக?
தமிழ்நாடு

பிஹார் தோல்வி பிடிக்குள் சிக்கிய காங். - என்ன செய்யப் போகிறது திமுக?

பிஹார் தேர்தல் முடிவுகளை வைத்து தமிழகத்தில் தங்களின் பேரவலிமையைக் கூட்டிக் கொள்ளலாம் என எதிர்பார்த்திருந்த காங்கிரஸ் கட்சி, இப்போது திமுக தரும் இடங்களை மறு பேச்சுப் பேசாமல் வாங்கிக்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. பிஹார் தேர்தலில் தங்களுக்கு அதிக இடங்களைக் கேட்டு ஆர்ஜேடி-யுடன் ஆரம்பத்திலிருந்தே மல்லுக்கு நின்றது காங்கிரஸ். கடைசியில், 61 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டாலும், 7 தொகுதிகளில் ஆர்ஜேடி-யுடனேயே நட்புடன்(!) மோதியது காங்கிரஸ். கடைசியில், காங்கிரஸுக்கு கைவசமானது என்னவோ 6 தொகுதிகள் தான். பிஹாரில் மட்டுமல்ல... தமிழகத்திலும் 1996 முதல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் போட்டியிட்ட போதெல்லாம் அபாரமான தோல்விகளையே சத்தித்திருக்கிறது.

feedburner
21 நவ.
3 min read