

திருச்சி அருகே வாழைத் தோப்பில் பிடிபட்ட 7 அடி நீள முதலை
திருச்சி: திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையில் சிறுகாடு தோப்பு பொய்யாமணி கரையில் உள்ள வாழைத் தோட்டத்தில் சுமார் 7 அடி நீளமுள்ள முதலை திரிவதை கண்டு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உய்யக்கொண்டான் வாய்க்கால் மூலம் அந்த முதலை வாழை தோப்பிற்கு சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் திருச்சி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் முதலையை லாவகமாக மீட்டனர்.

நீலகிரி ஈட்டி மரங்கள் பாதுகாக்கப்படுமா?
கூடலூர்: பிப்ரவரி மாதம் காலாவதியான பாரம்பரிய ஈட்டி மரங்களை பாதுகாக்க, தமிழ்நாடு ஈட்டி மரங்கள் (பாதுகாப்பு) சட்டம் ஏன் புதுப்பிக்கப்படவில்லை என இயற்கை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஈட்டி, சந்தனம், தேக்கு போன்ற விலை உயர்ந்த மரங்கள் அதிகளவில் உள்ளன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள்‌ மட்டுமின்றி தனியாருக்குச் சொந்தமான நிலங்களிலும் இந்த வகை மரங்கள் காணப்படுகின்றன. தனியார் நிலத்திலிருந்தாலும் இந்த மரங்களை வெட்டத் தடைகளும் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆராய்ச்சி பணிகளில் விருது: நவ.14-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆராய்ச்சிப் பணிகளில் சிறந்து விளங்கும் நபர்கள், நிறுவனங்களுக்கான சுற்றுச்சூழல் விருதுகளுக்கு நவ.14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்’ என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சுற்றுச்சூழல் கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை கவுரவிக்கும் விதமாக, 2024-ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் மர்மமாக இறந்து கிடந்த சிறுத்தை - வனத்துறை விசாரணை
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (நவ.5) அதிகாலை மர்மமாக இறந்து கிடந்த 3 வயது ஆண் சிறுத்தையின் உடலை மீட்டு வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

‘பறிபோகும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம்... விதிகளை மீறிய அதிகாரிகள்!’ - பாஜக குற்றச்சாட்டு
சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் விதிகளை மீறி அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு அதிகாரிகள் அனுமதி அளித்தது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அமைச்சருக்கு பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கடிதம் அனுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் 3800 ஏக்கர் நிலப்பரப்பு, ராம்சார் தளமாக கடந்த 2022 ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த சதுப்பு நிலப் பகுதியில் உள்ள 14.7 ஏக்கர் நிலத்தில், ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 1,250 வீடுகள் அடங்கிய பிரிகேட் மார்க் சென்டர் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வருகிறது.

கார்பன் சேமிப்பு திட்டம் விரைவில் அறிமுகம்: நிதி ஆயோக் ஆலோசகர் தகவல்
புதுடெல்லி: இந்திய வர்த்தக கூட்டமைப்பு (ஐசிசி) சார்பில் 17-வது நிலக்கரி உச்சி மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற நிதி ஆயோக் அமைப்பின் ஆலோசகர் (எரிசக்தி) ராஜ்நாத் ராம் பேசியதாவது: கார்பன் டை ஆக்ஸைடை சேமித்து பயன்படுத்தும் திட்டத்தை (சிசியுஎஸ்) அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சில தொழில்நுட்பங்களுக்கு 100% அரசு நிதியுதவி வழங்கப்படும். மொத்த ஊக்கத் தொகை 50% முதல் 100% வரை இருக்கும். இந்த ஊக்கத் தொகை, தொழில் துறையினர் கார்பன் சேமிப்பு தொழில்நுட்பங்களை எளிதில் கடைபிடிக்கவும் அவற்றை நிலக்கரி அடிப்படையிலான எரிசக்தி அமைப்புகளுடன் இணைக்கவும் உதவும் என்றார்.

வால்பாறையில் தாக்க முயன்ற கரடியை குடையால் அடித்து விரட்டிய தொழிலாளர்கள்!
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த லோயர் பாரளை எஸ்டேட் தேயிலை தொழிற்சாலை முன்பு நேற்று முன்தினம் மாலை தொழிலாளர்கள் 2 பேர் பேசிக் கொண்டிருந்தனர். லேசாக மழை பெய்து கொண்டிருந்த நிலையில், கையில் குடையுடன் நின்றிருந்தனர். அப்போது, தேயிலை செடிகளுக்கு பின்னால் மறைந்திருந்த கரடி ஒன்று, திடீரென ஓடி வந்து, தொழிலாளர்களை தாக்க முயன்றது. இதனை சற்றும் எதிர்பாராத தொழிலாளர்கள், சுதாகரித்துக் கொண்டு கையில் வைத்திருந்த குடையால், கரடியை அடித்தனர். இதையடுத்து, கரடி அங்கிருந்து தப்பி தேயிலை தோட்டத்துக்குள் ஓடி மறைந்தது.

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் 47 சட்டவிரோத ரிசார்ட்டுகளை மூட உத்தரவு
சென்னை: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்படும் 47 ரிசார்ட்டுகளை உடனடியாக மூட தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், அப்பகுதிகளில் பேட்டரி கார்களை இயக்குவது குறித்தும் தமிழக அரசு பதிலளிக்க அறிவுறுத்தியுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் தேசிய வன விலங்குகள் வாரியம், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் ஆகியவற்றின் ஒப்புதல் பெறாமல் சட்டவிரோதமாக செயல்படும் ரிசார்ட்டுகளை மூடக்கோரி கோவையைச் சேர்ந்த ஒலி விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவனரான கற்பகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

பயிர்க்கழிவை எரிப்பவர்களுக்கு சிறை: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
புதுடெல்லி: தேசிய தலைநகர் மண்டலத்தில் காற்று மாசுவை தடுக்கக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. விசாரணையின்போது தலைமை நீதிபதி கூறியதாவது: பயிர்க்கழிவுகளை எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறைக்கு அனுப்பினால் அது எச்சரிக்கையாக அமையும். பயிர்க்கழிவுகளை எரிக்கும் விவசாயிகளைத் தண்டிக்கும் பிரிவுகளைக் கொண்ட சட்டத்தை ஏன் இயற்றக் கூடாது?
சமீபத்திய செய்திகள்
சமீபத்திய புதுப்பித்தல்கள்


பள்ளிக்கரணை ஏரியில் கழிவுநீர் கலப்பதை வேடிக்கை பார்க்கும் சென்னை மாநகராட்சி, நீர்வளத் துறை!

தீபாவளியை விபத்து, ஒலி மாசு இல்லாமல் கொண்டாட பொதுமக்களுக்கு வேண்டுகோள்

மயக்க ஊசி செலுத்த முயன்றபோது ‘ரோலக்ஸ்’ யானை தாக்கி கால்நடை மருத்துவர் படுகாயம்
கோவை: கோவை அருகே மயக்க ஊசி செலுத்த முயன்றபோது, ‘ரோலக்ஸ்’ என்ற காட்டு யானை தாக்கியதில் கால்நடை மருத்துவர் படுகாயமடைந்தார். கோவை மாவட்டம் நரசீபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ‘ரோலக்ஸ்’ எனப்படும் ஒற்றை ஆண் காட்டு யானையின் நடமாட்டம் உள்ளது. இந்த யானை நரசீபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் அடிக்கடி நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தியும், விளை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தியும் வருகிறது.
விளம்பர இடம்
உங்கள் விளம்பரத்தை இங்கே காட்சி செய்யலாம்
மேலும் செய்திகள்
தமிழ்நாடு முழுவதும் மற்றும் அதற்கு அப்பால் இருந்து சமீபத்திய கதைகளுடன் புதுப்பித்த நிலையில் இருங்கள்

பசுமை மின்சாரம் உற்பத்தி திறனில் தமிழகத்துக்கு பின்னடைவு
சென்னை: சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நிலையான மின் உற்பத்தியை உறுதி செய்யவும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் வாயிலாக மின்சாரம் உற்பத்தி செய்ய, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. அனைத்து மாநிலங்களும் சூரியசக்தி மின் நிலையங்கள், காற்றலைகள், நீர்மின் நிலையங்களை அமைத்து, மாநிலத்தின் பசுமை மின்சார உற்பத்தி திறனை அதிகரித்து வருகின்றன. இந்த மின்நிலையங்களை மாநிலங்களின் மின்வாரியங்களும், தனியார் நிறுவனங்களும் அமைத்து வருகின்றன.

பள்ளிக்கரணை சதுப்பு நில விவகாரம்: தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை விளக்கம்
சென்னை: ‘ராம்சார் தலம் அமையும் நிலங்கள் வரையறுக்கப்படாததால், தற்போதைய பள்ளிக்கரணை சதுப்புநில காப்புக்காட்டு எல்லைகளுக்கு வெளியே உள்ள தனியார் பட்டா நிலங்களுக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது’ என சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. சென்னை பெரும்பாக்கத்தில், பள்ளிக்கரணை காப்புக்காடு ராம்சார் தலத்தில், அடுக்குமாடி கட்டிட திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதுதொடர்பாக, பாஜக, அதிமுக தரப்பிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

‘Blood Moon’ இன்று முழு சந்திர கிரகணம்: இந்தியாவில் எந்தெந்த நகரங்களில் பார்க்க முடியும்?
சென்னை: பேரண்டம் எப்போதுமே விந்தையானது. அந்த வகையில் இன்று (செப்.7) இரவு முழு சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. இதுவொரு அரிய நிகழ்வு. இதை வெறும் கண்களில் மக்கள் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள சூழலில் இந்நிகழ்வு இந்தியாவில் எந்தெந்த நகரங்களில் பார்க்க முடியும் என்பதை பார்ப்போம். நிலவுக்கு எப்போதுமே நம் வாழ்வில் தனித்த இடம் உண்டு. குழந்தைகள், பெரியவர்கள், கவிஞர்கள், விண்வெளி ஆய்வாளர்கள் என ஒவ்வொருவரும் சந்திரனை சார்ந்து இருப்பது உண்டு. பகல் நேர பகலவனை காட்டிலும் இரவு நேர நிலவொளி பொழுது பலருக்கும் பிடிக்கும். கடற்கரையில் அமர்ந்தபடி நிலவை பார்த்து ரசிப்பது தனித்த அனுபவம். இரவு நேர வானம், விண்மீன் கூட்டம், அதற்கு மத்தியில் தவழும் வெண்மதி என அந்த காட்சியின் நிகழ் அனுபவம் அற்புதமாக இருக்கும்.

உலகின் மாசுபட்ட நகரங்கள்: முதலிடத்தில் டெல்லி
புதுடெல்லி: உலகின் மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. சுவிஸ் காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான ஐகியூஏர்-ன் (IQAir) உலக காற்று தர அறிக்கை 2025 தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் பட்டியலில் நம் நாட்டின் தலைநகரமான டெல்லி முதலிடத்தைப் பிடித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி டெல்லியின் காற்று தரக்குறியீடு (ஏகியூஐ) 350 ஆக உள்ளது.

மான்கள் வாழும் கள்ளங்காடு பகுதி பாதுகாக்கப்படுமா?
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் வஞ்சிநகரம், பூதமங்கலம் மற்றும் கொடுக்கம்பட்டி ஆகிய 3 ஊராட்சிகளை உள்ளடக்கிய கள்ளங்காடு பகுதி 100 ஏக்கரில் அமைந்துள்ளது. மதுரை இயற்கை மற்றும் பண்பாட்டு அறக்கட்டளை ஆய்வுக்குழுவினரால் இப்பகுதியில் உள்ள பண்பாடு மற்றும் பல்லுயிரிகள் குறித்த ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. இதில் இங்கு பழமையான கோயில் காடுகள் உள்ளதும், இங்கு உசிலை, குருந்தம், விடத்தலை, களா, காரை, ஆத்தி, ஆலம், அரசம், தைலம், குறிஞ்சி, திருகுகள்ளி, செங்கத்தாறி, மஞ்சநத்தி, சிறுபூனைக்காலி உள்ளிட்ட தாவரங்கள் பெருமளவில் காணப்படுகிற தகவல் வெளியானது.

20 ஆண்டாக வளர்த்த மரத்தை வெட்டியதால் மூதாட்டி கதறல்
புதுடெல்லி: சத்தீஸ்கரில் 20 ஆண்டுகளுக்கு முன் நட்டு வளர்ந்த அரச மரம் வெட்டப்பட்ட தால், அதன் அருகே மூதாட்டி ஒருவர் கதறி அழும் வீடியோவை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ள மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இந்த காட்சி நெஞ்சை உருக்குவதாக உள்ளது என தெரிவித்து உள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் கைராகர் மாவட்டம் சாரா கோண்டி கிராமத்தைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி தியோலா பாய். இவர் 20 ஆண்டுகளுக்கு முன் தான் வசிக்கும் பகுதியில் அரச மரக் கன்றை நட்டு வளர்த்துள்ளார். அது தற்போது மிகப் பெரிய மரமாக வளர்ந்திருந்தது. அந்த மரம் தெய்வமாக வழிபடப்பட்டது போல் உள்ளது.

டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க செயற்கை மழை
புதுடெல்லி: டெல்லியில் மாசுவைக் குறைக்க செயற்கை மழை அவசியம் என்று முதல்வர் ரேகா குப்தா அறிவித்துள்ளார். டெல்லியில் நேற்று முன்தினம் கிளவுட் சீடிங் எனப்படும் செயற்கை மழை பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இது தொடர்பாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: காற்று மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் டெல்லியில் நேற்று செயற்கை மழை வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு சவாலாக பருவநிலை மாற்றம்: மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவர் தகவல்
சென்னை: சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பருவநிலை மாற்றம் பெரும் சவாலாக இருப்பதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவர் ஜெயந்தி தெரிவித்துள்ளார். அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) சென்னை வளாகம் மற்றும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI) சார்பில் "தென்னிந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தற்போதுள்ள பிரச்சினைகள் மற்றும் சவால்கள்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை தரமணியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ் நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவர் ஜெயந்தி பேசியதாவது: வாகன உதிரிபாக உற்பத்தி, ஜவுளி, தோல், சர்க்கரை மற்றும் அதன் உப பொருட்கள் உற்பத்தியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 40% பேர் தமிழகத்தில் உள்ளனர்.

சென்னை கிண்டியில் 118 ஏக்கரில் மாபெரும் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணிகள் தொடக்கம்
சென்னை கிண்டியில் 118 ஏக்கர் பரப்பில் மாபெரும் சுற்றுச்சூழல் பூங்காவில், நீர்நிலைகளின் கரைகள் அமைக்கும் பணி உள்ளிட்ட தோட்டக் கலைப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து, பார்வையிட்டார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் சென்னை, கிண்டியில் 118 ஏக்கர் பரப்பில் மாபெரும் சுற்றுச்சூழல் பூங்காவில், முதற்கட்டமாக நீர்நிலைகளின் கரைகளை சீரமைக்கும் பணிகள், அரியவகை மரங்கள், அழகிய மலர்ச் செடிகள் நடவு செய்தல் மற்றும் நாற்றங்கால் பணிகள் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை டூம்ஸ் டே மீன்!
ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே பாம்பனில் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கழமை நூற்றுக்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். பின்னர் மீன்பிடித்து விட்டு மீனவர்கள் கரை திரும்பினார்கள். மீனவர்கள் வலையில் டூம்ஸ் டே (இறுதி நாள்) மீன் என்றழைக்கப்படும் அரிய வகை ஆழ்கடல் மீனான (Oar Fish) எனப்படும் துடுப்பு மீன் சிக்கியது. இந்த மீன் 10 கிலோ எடையும், 5 அடி நீளமும் உடையதாகவும் இருந்தது. மன்னார் வளைகுடா கடற்பகுதியில் முதன்முறையாக இந்த மீன் பிடிபட்டதால் இந்த மீனை பாம்பன் மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

இந்தியாவில் கடும் மழைப் பொழிவு, வறட்சி ஏற்படும்: புவி அறிவியல் அமைச்சக முன்னாள் செயலர் எச்சரிக்கை
வரும் காலங்களில் காலநிலை மாற்றம் காரணமாக, இந்தியப் பகுதிகளில் கடும் மழைப்பொழிவும், கடும் வறட்சியும் ஏற்படக்கூடும் என்று மத்திய புவி அறிவியல் அமைச்சக முன்னாள் செயலர் மாதவன் நாயர் ராஜீவன் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள ஆசிய இதழியல் கல்லூரியில், காலநிலை மாற்றம் மற்றும் இந்தியாவில் அதன் தாக்கம் குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய புவி அறிவியல் அமைச்சக முன்னாள் செயலர் மாதவன் நாயர் ராஜீவன் பேசியதாவது: கால நிலை மாற்றத்தின் தாக்கத்தால் குறுகிய காலத்தில் அதிக அளவு மழை பொழிவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய மொத்த மழையில் 50 சதவீதம், குறுகிய காலத்தில், அதாவது 16 மணி நேரத்தில் பெய்துவிடுகிறது. இது 14 மணி நேரமாக குறைந்து விட்டது. வரும் காலங்களில் இன்னும் குறுகிய காலத்தில் கனமழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது.

கொடைக்கானலில் அனுமதியின்றி வெட்டப்படும் மரங்கள் - வனத்துக்கும் தண்ணீருக்கும் ஆபத்து
பழநி: கொடைக்கானல் வனப்பகுதி யில் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்படுவதால் வனத்துக் கும், தண்ணீருக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகி வருவ தாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர். கொடைக்கானல் வனப் பகுதியில் அரியவகை மூலிகை கள், குங்குலியம், சில்வர் ஓக், ரோஸ் உட், வேங்கை உள்ளிட்ட மரங்கள் அதிகளவில் உள்ளன. தமிழகத்தில் பசுமை பரப்பை அதிகரிக்க, பசுமை தமிழகம் என்ற இயக்கம் தொடங்கப்பட்டு பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், அதற்கு நேர் மாறாக, கொடைக்கானல் மலைப் பகுதியில் சமீபகாலமாக மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பட்டா நிலங்களில் உள்ள மரங்களை வெட்ட அனுமதி பெற்று, அருகிலுள்ள வனப்பகுதியில் இருந்தும் மரங்களை வெட்டி வருகின்றனர். அவ்வாறு வெட்டிய மரங்களை சாலையோரம், பட்டா நிலம் மற்றும் வனப்பகுதிக்கு உள்ளே பதுக்கி வைக்கின்றனர்.

சென்னை | லேப்-டாப் வியாபாரியிடம் ரூ.55 லட்சம் வழிப்பறி: தலைமறைவாக இருந்த 3 பேர் கைது
சென்னை: லேப்-டாப் வியாபாரியிடம், போலீஸ் எனக் கூறி, ரூ.55 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை, ரிச்சி தெருவில் நரேஷ்குமார் (38) என்பவர் லேப்-டாப் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த அக். 3-ம் தேதி இரவு, அவரது நண்பருக்கு சொந்தமான ரூ.55 லட்சம் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் வந்த சிலர் நரேஷ்குமாரை வழிமறித்தனர்.

முதல்வர் ஸ்டாலின், நடிகர் அஜித் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் அஜித் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் அஜித், லிவிங்ஸ்டன், நடிகை குஷ்பு, தமிழக இளம் செஸ் விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தா, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும், பட்டிமன்ற பேச்சாளருமான திண்டுக்கல் லியோனி உள்ளிட்ட 11 பேரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வழக்கம்போல் டிஜிபி அலுவலகத்துக்கு இ-மெயில் வாயிலாக இந்த மிரட்டல் கடிதம் வந்திருந்தது. மிரட்டல் விடுக்கப்பட்ட 11 பேர் வீடுகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வெறும் புரளி என்பதை உறுதி செய்தனர். முதல்வர் உட்பட பலரது வீட்டுக்கு மீண்டும் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

சென்னை | போதை காளான் கடத்திய மருத்துவ மாணவர் கைது
சென்னை: நொளம்பூர் போலீஸார் நேற்று முன்தினம் அதே பகுதி அண்ணாமலை அவென்யூ சந்திப்பில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரின் பையை சோதனை செய்தபோது, போதைக் காளான், போதை ஸ்டாம்ப் அகியவை இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீஸார் அதை வைத்திருந்த தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் மோனிஷை கைது செய்தனர். இவர் கூரியர் மூலம் போதைப் பொருளை வாங்கியது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை | குட்கா கடத்திய அசாம் இளைஞர்கள் 4 பேர் கைது
சென்னை: எழும்பூர் போலீஸார் நேற்று அதிகாலை எழும்பூர், காந்தி இர்வின் சாலை, ஆவணக் காப்பகம் அருகே கண்காணித்தனர். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 4 பேரிடம் சென்று விசாரித்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து அவர்கள் வைத்திருந்த பைகளை சோதித்து பார்த்தபோது அதில், குட்கா மற்றும் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அதிகம் படிக்கப்பட்டது
எங்கள் வாசகர்கள் பேசும் பிரபலமான கதைகள்